விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (24-ம் தேதி வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது.   
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (24-ம் தேதி வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது.   

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு முகமையின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் தரும் வகையில் விருதுநகர் சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் பிரபல முன்னணி தனியார் பார்மஸி நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கிளைகளில் பணியாற்றுவதற்கான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். மேலும், இந்நிறுவனத்தில் 10,மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டம் மற்றும் ஆங்கிலம் இலக்கியத்தில் பட்டம், பார்மஸி, பட்டயம், தொழிற்பயிற்சி ஆகியவைகளில் ஏதேனும் ஒரு கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம் ஆகும்.  

 இந்த முகாமில் தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு அன்றைய தினமே பணிக்கான உத்தரவும் வழங்கப்பட இருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமி்ல் கலந்து கொண்டு பலர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனால், வேலைவாய்ப்பு முகாம் பணி நியமனம் பெற்றவர்களின் பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. அதனால் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்கள் இம் முகாமில் பங்கேற்று தங்களின் வாழ்வாதரத்தை உயர்த்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com